இலங்கையில் அரச நிறுவனங்கள் சிலவற்றை தனியார் மயப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
Kanimoli
2 years ago

இலங்கையில் அரச நிறுவனங்கள் சிலவற்றை தனியார் மயப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே ஜனாதிபதி ரணில் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை விமான சேவை நிறுவனம், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கா டெலிகொம் ஆகிய அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படலாம் எனவும் ரணில் கூறியுள்ளார்.
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தையும் தனியார் மயப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



