ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கடிதம்
Mayoorikka
2 years ago

இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ள ஜப்பானிய பிரதமர், இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
“சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்” ஒன்றை அடைவதற்கான ஒத்துழைப்பு உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக ஜப்பானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.



