இன்றைய வேத வசனம் 17.08.2022: உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்

Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 17.08.2022: உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்

கிறிஸ்தவத்தின் அஸ்திபாரமே இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலில் தான் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

வரலாற்றை விழிகளையே மூடிவிட்டால் தான் இயேசுவின் உயிர்ப்பை மறுக்க முயல முடியும் என்கிறார் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் தாமஸ் அர்னால்டு.

பேதுரு உயிர்த்தெழுந்த இயேசுவைத் தன் கண்களால் கண்ட பின் தான் வல்லமையான ஊழியனாக மாறுகிறார்.

கிறிஸ்துவின் உயிர்தெழுதல் மாம்சீக இச்சையான பாவத்தில் மரித்த நம்மை பரிசுத்த வாழ்விற்காக உயிர்ப்பிக்கிறது.

மகதலேனா மரியாள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை அறிந்தபின், அதை அநேகருக்கு அறிவிக்கிற பாத்திரமாய்ச் செயல்படுகிறாள்.

1 கொரிந்தியர் 15:14ல் அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா உங்கள் விசுவாசமும் விருதா எனக் குறிப்பிடுகிறார்.

எப்படி இயேசுவின் பிறப்பு மாபெரும் சந்தோஷத்தின் நற்செய்தியா, அது போல அவருடைய உயிர்த்தெழுதல் ஒரு மாபெரும் நம்பிக்கையின் நற்செய்தி!

அவர் உயிருள்ள தேவன் ஜீவிக்கிறவர் என்கிற நற்செய்தி இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலுக்குப் பின்பு தான் உலகெங்கும் அறிவிக்கப்பட்டது.

பின்பு அப்போஸ்தலனாகிய பவுலின் காலம் முதல் இன்றுவரை, இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதல் நமமுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாயிருக்கிறது.

ஆகவே தான் திருச்சபை இன்றளவும் வளர்ந்து பெருகிக் கொண்டிருக்கிறது. கிறிஸ்துவின் உயிர்தெழுதல் திருச்சபையின் அஸ்திபாரம்.

இது ஏதோ தற்செயலாய் ஏற்பட்டது அல்ல. திட்டமிட்ட செயல்! கிறிஸ்து சிலுவையில் மரிப்பதும் மூன்றம் நாளில உயிர்த்தெழுவதும் கடவுளின் சித்தம் என்று சத்திய வேதம் தெளிவாய் கூறுகிறது.

எங்கு பாவங்கள் அழிந்து பரிசுத்தம் பிறக்கின்றதோ, எங்கு நேர்மை, உண்மை, அன்பு, தேவபயம் இருக்கிறதோ அங்கெல்லாம் இயேசுவின் உயிர்த்தெழுதல் வெளிப்படுகிறது என்பதே உண்மை..!

நாமும் உயிர்தெழுந்த இயேசுவின் அன்பை, தியாகத்தை உலகிற்க்கு எடுத்து உரைத்து அனேகரை சிஷர்களாய் மாற்றமாக!! ஆமென்!

மத்தேயு 28:19-20

19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.