எகிப்தில் சோகம் - கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் பலி

Prasu
2 years ago
எகிப்தில் சோகம் - கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் பலி

எகிப்து தலைநகர் கெய்ரோவின் வடமேற்கில் இம்பாபா மாவட்டத்தில் அபு சிபைன் என்ற கிறிஸ்தவ ஆலயம் செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், திடீரென இந்த ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்து உள்ளனர். 

பலர் காயமடைந்து உள்ளனர். மின்சார கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

15 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

அனைத்து நிர்வாக சேவைகளும் முடுக்கி விடப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என அதிபர் அப்துல் பதா அல்-சிசி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!