இலங்கைக்கு ஆதரவு வழங்க முன்வருமாறு ஐ.நா வலியுறுத்தல்!
Mayoorikka
2 years ago

சர்வதேச நிதி நிறுவனங்கள், தனியார் கடன் வழங்குவோர் மற்றும் ஏனைய நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
இலங்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலை, நாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பாதிப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



