Rüdlingen பகுதியில் சற்றுமுன்னர் இரு கார்கள் பயங்கர விபத்து – 4 பேர் படுகாயம்
Prabha Praneetha
2 years ago

79 வயதான ஒரு ஓட்டுநர் Rüdlingen பகுதியில் சற்று முன்னர் பாரிய விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது இரண்டு கார்கள் மொத்தமாக சேதமடைந்துள்ளதோடு பயணித்த 4 பேர்படுகாயம் அடைந்துள்ளார்கள்.
மதியம் 12 மணிக்குப் பிறகு இடம் பெற்ற இந்த விபத்து இரண்டு கார்கள் மோதியதில் ஏற்பட்டுள்ளது. ஒரு காரில் 79 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இரு இளைஞர்களுடனும்.. மற்றைய காரில் 45 வயது ஓட்டுனருடன் 13 மற்றும் 15 வயதுக்குழந்தைகள் இருவரும் பயணம் செய்துள்ளார்கள்.
இரு கார்களும் பக்கவாட்டில் மோதியதால் ஒரு கார் குடைசரிந்து வீழ நேரிட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தார்கள். இதில் காயம் அடைந்த நால்வர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்கள்.



