கோட்டாபய ஜனாதிபதி பதவி விலகுவதாக அறிவிப்பினை தொடர்ந்து மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம்
Kanimoli
2 years ago

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பதவி விலகல் கடிதம் கிடைத்துள்ளதாக சபாநாயகரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கோட்டாபய ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக வெளியான அறிவிப்பினை தொடர்ந்து பல பகுதிகளில் மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில்,மேல் மாகாணத்தில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் தென்னம் மட்டைகளில் பட்டாசு சத்தங்களை எழுப்பி வித்தியாசமாக முறையில் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.



