ஜனாதிபதி பதவிக்காக திரைமறைவில் ரணில் செய்யும் சூழ்ச்சிகள்... அம்பலப்படுத்திய உறுப்பினர்கள்
Nila
3 years ago

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியைப் பெற்றுக்கொள்ள திரைமறைவில் தற்போது சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.
மக்களின் ஆணை பெற்று ஜனாதிபதியாக இருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மக்களின் எதிர்ப்பால் பதவியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் ஆணை இல்லாமல் நாடாளுமன்றம் வந்த ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
நாடாளுமன்றத்தில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ரணில் விக்ரமசிங்க உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.



