இராமநாதபுரம் கடற்கரைப் பகுதியில் இலங்கை மீன்பிடிப் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது
Kanimoli
2 years ago

இராமநாதபுரம் - ஏர்வாடி கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்றொழிலாளர்கள் பயன்படுத்தும் மீன்பிடிப் படகு ஒன்று இன்று (19) கரை ஒதுங்கியுள்ளதாக மரைன் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற மரைன், கியூ பிரான்ஞ் காவல்துறையினர் படகில் கடத்தல்காரர் யாரும் கடத்தல் பொருட்களைக் கொண்டு வந்தார்களா? அல்லது கடல் சீற்றம் காரணமாக நங்கூரம் அறுந்து படகு கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கியதா எனப் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.



