மூன்று எரிபொருள் போக்குவரத்து பௌசர்களின் அனுமதிப்பத்திரம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம்
Prabha Praneetha
2 years ago

மூன்று எரிபொருள் போக்குவரத்து பௌசர்களின் அனுமதிப்பத்திரம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பதிவாகிய மூன்று சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நிறைவு பெறும் வரையில் பௌவுசர்களின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட விதம் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்ட காணொளிகள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.



