கொழும்பில் உள்ள சகல பாடசாலைகளுக்கு அடுத்த வாரம் விடுமுறை
Nila
2 years ago

கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு அடுத்த வாரம் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.



