இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு!
Nila
2 years ago

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படவுள்ள கடன் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே குறித்த குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
அவர்கள் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.



