மக்களின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்துகொள்ளாத அரச தலைவர் மற்றும் பிரதமருடன்இணைந்து ஆட்சி அமைக்க முடியாது - சஜித் பிரேமதாஸ
Kanimoli
2 years ago

மக்களின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்துகொள்ளாத இந்த அரச தலைவர் மற்றும் பிரதமருடன் ஒன்றாக இணைந்து ஆட்சி அமைக்க முடியாது எனவும், அவர்கள் மக்களுடன் விளையாடிக் கொண்டே இருக்கின்றனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நமது நாடு தரவரிசைகளில் பின்னடைவுகளைச் சந்திக்கும்போது இது ஒரு சர்வதேச சதி என்றே அரசு கூறியது.
இன்று மக்கள் வரிசைகளில் நின்று மரணிக்கும் நிலைக்கு நாடு வந்து விட்டது.இல்லை, இயலாது மற்றும் பார்க்கலாம் எனச் சொல்லுவதற்கு அரசொன்று தேவையில்லை. நிலையற்ற தீர்வுகளால் நாடு முன்னேறாது. மக்கள் ஆணையின் மூலம் கிடைக்கப்பெறும் தீர்வே ஒரே தீர்வு என்றார்.



