சர்வகட்சி அரசாங்கமே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால தெரிவிப்பு!
Mayoorikka
2 years ago

சர்வகட்சி அரசாங்கத்தை உடனடியாக நிறுவ வேண்டிய கட்டாயத்தில் நாடு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கத்தினை ஏற்படுத்துவதன் மூலம் தற்போது நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சனைகளையும் குறுகிய காலத்தில் தீர்க்க முடியும் என தான் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.



