பெற்றோல் இறக்குமதிக்கு கடன் கடிதம் திறப்பு!
Mayoorikka
2 years ago

3 இலட்சம் பீப்பாய்கள் ஒக்டேன் 92 ரக பெற்றோலை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதம் திறக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 42.6 மில்லியன் அமெரிக்க டொலருக்கான கடன் கடிதம் மக்கள் வங்கியினால் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடன் கடிதங்களை விரைவில் திறக்க முடிந்தால் வார இறுதியில் பெற்றோலை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.



