பெரும்பாலான பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் : வானிலை
Prabha Praneetha
2 years ago
-1.jpg)
குறைந்த வளிமண்டல குழப்பங்கள் காரணமாக தீவின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய வானிலை முன்னறிவிப்பை வெளியிடும் போது, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும்.
எனவே, இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.



