தொடர்ந்தும் அகதி தஞ்சம் கோரி தமிழகம் செல்லும் இலங்கையர்கள்: இன்றும் 4 சிறுவர்கள் உட்பட 7 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்
Mayoorikka
2 years ago

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சட்ட விரோதமாக தமிழகத்திற்கு செல்லும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் தனுஷ்கோடியை அடுத்த ஒன்றாம் தீடை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (17) இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண், 4 சிறுவர்கள் உட்பட 7 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மரைன் பொலிஸார் விரைந்து சென்று அவர்களை மீட்டு விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து விசாரணை முடிந்த பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு தஞ்சமடைந்துள்ளவர்கள் வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2 குடும்பங்களை சேர்ந்த 7 பேர் என தெரிய வந்துள்ளது.



