பிரிட்டனில் 500ஐ தாண்டிய குரங்கு அம்மை பாதிப்பு
#MonkeyPox
Prasu
3 years ago
இங்கிலாந்தில் 504 பேருக்கும், ஸ்காட்லாந்தில் 13 பேருக்கும், வடக்கு அயர்லாந்தில் இரண்டு பேருக்கும், வேல்ஸில் 5 பேருக்கும் குரங்கு அம்மைக் காய்ச்சல் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 524 ஆக அதிகரித்துள்ளது என யூகே சுகாதார பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது.
குரங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் காயங்கள் முழுமையாக காயும் வரை மற்றவர்களுடன் நெருக்கமாக பழகுவது தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஒட்டுமொத்த ஆபத்து சிறியதாகத் தோன்றினாலும் இந்த பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு பொது சுகாதார நிறுவனங்கள் செயல்படுவதால் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என ஹெய்மன் தெரிவித்துள்ளார்.