இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 50,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை!
Reha
2 years ago

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 50,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்குத் தேவையான நிதியை இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
இதனூடாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரிசி தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், அரிசி விலையின் அசாதாரணமான உயர்வைக் கட்டுப்படுத்தவும் முடியுமென பிரதமர் குறிப்பிட்டார்.



