நெருக்கடிக்கு நிரந்தர தீர்வை பெற பொருளாதார வரைபு சமர்ப்பித்த ரணில்!
Mayoorikka
2 years ago

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நிரந்தர தீர்வை முன்வைப்பதற்கான பொருளாதார வரைபொன்றை எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இன்று (16) இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் பிரதமர் இதனை குறிப்பிட்டார்.
குறுகிய கால மற்றும் நடுத்தர கால இலக்குகளை அடைய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக, கூட்டத்தில் கலந்து கொண்ட நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளும் கேட்டறியப்பட்டன.



