இலங்கைக்கு அமெரிக்கா 6 மில்லியன் டொலர் அவசர நிதியுதவி
Mayoorikka
2 years ago

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பதிவலளிப்பதற்காக, 6 மில்லியன் டொலர் அவசர நிதியுதவியை வழங்குவதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தினால், வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
விளிம்புநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த அவசர நிதியுதவி வழங்கப்படுவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.



