கொழும்பில் சில பகுதிகளுக்கு 16 மணிநேர நீர் வெட்டு
Prabha Praneetha
2 years ago

குழாய்களை மேம்படுத்தும் பணி காரணமாக கொழும்பின் பல பகுதிகளுக்கு 16 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய விநியோக வலையமைப்பை மேம்படுத்தும் பணிகள் காரணமாக கொழும்பில் சனிக்கிழமை இரவு 11.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை 16 மணிநேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 05 மற்றும் 06 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.
கொழும்பு 04 இல் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும்.



