வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் புதிய சுற்றறிக்கை வெளியீடு
Kanimoli
2 years ago

தற்போதைய எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் புதிய சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த திட்டத்தில் சுகாதாரம், மின்சாரம் மற்றும் எரிசக்தி, கல்வி, பாதுகாப்பு மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் இல்லை என சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.


பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன குறித்த யோசனையை அமைச்சரவையில் சமர்பித்திருந்தார்.



