தனது 5 வயது மகனை பாலத்தில் தூக்கி வீசிய கொடூர தாயை தாக்கிய பிரதேச வாசிகள்

வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கதிரான பாலத்தில் தனது ஐந்து வயது மகனை ஆற்றில் வீசிவிட்டு, தானும் ஆற்றில் குதிக்க முயன்ற 42 வயதான தாயை நேற்று (15) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாயின் செயற்பாட்டில் சந்தேகமடைந்த பிரதேசவாசிகள், அவரை பிடித்து, கடுமையாக தாக்கி அருகிலுள்ளள வீதிச் சோதனை சாவடியில் கடமையிலிருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதன்பின்னர் மீன்பிடி படகுகளைப் பயன்படுத்தி, குறித்த சிறுவனை தேடும் முயற்சியில் பிரதேசவாசிகள் ஈடுபட்டிருந்தனர் எனினும், அம்முயற்சி கைகூடவில்லை.
சிறுவன், வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்றும், அந்தப் பெண், சிறுவனின் தாயார் என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கடற்படையினரின் உதவியுடன் அந்த சிறுவனைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்த பொலிஸார், கைது செய்யப்பட்ட தாயை, வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் இன்று (16) ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.



