அரச சேவைகளையும் பரவலாக்குவது காலத்தின் தேவை - கோட்டாபய ராஜபக்ச
Kanimoli
2 years ago

வீட்டிலிருந்து கடமைகளை நிறைவேற்றுவதைப் போன்று, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்குவது காலத்தின் தேவை என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆட்களைப் பதிவு செய்தல், குடிவரவு, குடியகல்வு மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உள்ளிட்ட பிற அரச நிறுவனங்களையும் மேலும் மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பரவலாக்குவதன் மூலம் அந்த சேவைகளை மிகவும் திறமையாக வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
இவ்வாறான முக்கிய நிறுவனங்களை ஒன்றோடொன்று இணைப்பதன் முக்கியத்துவத்தை அரச தலைவர் சுட்டிக்காட்டினார்.



