சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி பொலிஸ் செய்தி: பொலிஸார் வெளியிட்ட தகவல்
Mayoorikka
2 years ago

அனைவரும் படிக்க வேண்டிய பொலிஸ் செய்தி’ என சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்தி போலியானது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை காவல்துறையினரால் அவ்வாறான செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘எச்சரிக்கை – பொருளாதார நெருக்கடி’ என 22 விடயங்களை குறிப்பிட்டு, இறுதியில் கவனமாக இருங்கள் என்று சம்பந்தப்பட்ட அறிக்கை பொலிஸினால் வெளியிடப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அறிவிப்புகள் தமது கடிதத் தலைப்பின் கீழ் ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே, இவ்வாறான பொய்யான அறிக்கைகளுக்கு ஏமாற வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களை கேட்டுக் கொள்கிறது.



