உந்துருளியில் சென்ற இரு பெண்களை மோதித் தள்ளிவிட்டு தப்பிச்சென்ற வாகனம் - சிக்கிய இலக்கத் தகடு
Kanimoli
2 years ago

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உந்துருளியில் சென்ற இரு பெண்களை மோதித் தள்ளிவிட்டு வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளது.
இதில், பெண்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று புதன்கிழமை 7.30 மணியளவில் யாழ். நகரின் மார்ட்டின் வீதிக்கு அண்மையாக பிரதான வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
படுகாயங்களுக்கு இலக்கான இரு பெண்களும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மோதிய வாகனம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அதன் இலக்கத் தகடுகளில் ஒன்று மோதிய மோட்டார் சைக்கிளில் சிக்கியுள்ளது.
சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



