அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், செத்தல் மிளகாய், கடலை மற்றும் நெத்தலி ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும்
Kanimoli
2 years ago

சந்தைகளில் அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், செத்தல் மிளகாய், கடலை மற்றும் நெத்தலி ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மே மாதம் 6 ஆம் திகதி முதல் அத்தியாவசிய பொருள் இறக்குமதியின் போது இதுவரை பயன்படுத்தப்பட்ட திறந்த கணக்கு அடிப்படையிலான முறையை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
அந்த முறைமை நிறுத்தப்பட்டதன் மூலம் அத்தியாவசிய பொருள் இறக்குமதியின் போது டொலர் பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



