பொதுமக்கள் ஏமாற வேண்டாம் பொலிஸ் வழங்கிய அவசர அறிவித்தல்
Kanimoli
2 years ago

“அனைவரும் படிக்க வேண்டிய பொலிஸாரின் அறிவிப்பு” என்று சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் பரவி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இலங்கைப் பொலிஸாரால் அறிவிக்கப்பட வேண்டிய விடயங்கள் ஏதேனும் இருப்பின், அவை பொலிஸ் தலைமையகத்தின் கடிதத் தலைப்பினாலோ அல்லது பொலிஸ் ஊடகப் பிரிவின் கடிதத் தலைப்பினாலோ ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்படும் என குறிப்படப்பட்டுள்ளது.




