வத்தளை பிரதான பாலத்தில் 5 வயது சிறுவனை வீசிய பெண்
Kanimoli
2 years ago

வத்தளை -மட்டக்குழி எமில்டன் பிரதான பாலத்தில் 5 வயது சிறுவனை ஒரு பெண் வீசியுள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த பாலத்தில் குறித்த பெண்ணும் குதிக்க முற்பட்டுள்ளார். இதன்போது அந்த இடத்திற்கு வருகை தந்த பொது மக்கள் அந்த பெண் பாலத்தில் குதிப்பதை தடுத்துள்ளதுடன் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாலத்தில் வீசப்பட்ட சிறுவனை அங்குள்ள பொது மக்களும் கடற்தொழிலாளர்களும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டும் இன்னும் சிறுவன் பற்றிய எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.
இதேவேளை சிறுவனை பாலத்தில் வீசியது அவருடைய தாயாரா? என்ற சந்தேகத்துடன் குறித்த பெண்ணை பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



