பசியால் பலர் நாட்டில் இறக்கும் நிலை
Kanimoli
2 years ago

ரணில் பிரதமராக வந்த பின்னர் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையில் மாற்றம் வரும் என மக்கள் நம்பிய போதிலும் அது எதுவும் நடக்கவில்லை. மாறாக பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்த வண்ணமே உள்ளது.
குறிப்பாக எரிபொருட்களின் தொடர்ச்சியான விலை அதிகரிப்பால் ஏனைய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.இதனால் மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
இதனால் நாளாந்தம் உண்ணும் உணவின் அளவு கூட குறிப்பாக மலையக மக்களிடையே குறைந்து வருகிறது.



