ஏழு நாட்களாக நங்கூரமிடப்பட்டிருந்த எரிவாயு கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டதாக லிட்ரோ நிறுவனம் தகவல்
Kanimoli
2 years ago

கெரவலப்பிட்டிய, தல்தியவத்தை கடற்கரையில் ஏழு நாட்களாக நங்கூரமிடப்பட்டிருந்த எரிவாயு கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
டொலர் பற்றாக்குறை காரணமாகக் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகக் குறித்த கப்பல் ஒருவாரமாக கொழும்புத்துறைமுக கடற்பரப்பில் தரித்து நிற்க நேர்ந்திருந்தது.
இந்நிலையில் இன்று பிற்பகல் தொடக்கம் கப்பலிலிருந்து எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நாளை நண்பகல் தொடக்கம் மீண்டும் எரிவாயு விநியோகம் நடைபெறும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.



