இந்திய அரசால் வழங்கப்படும் உணவு தொகை வழங்காததைக் கண்டித்து அகதிகள் உண்ணாவிரதம்
Kanimoli
2 years ago

இந்திய அரசால் வழங்கப்படும் உணவு தொகை வழங்காததைக் கண்டித்து இலங்கையைச் சேர்ந்த அகதிகள் இருவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு தனுஷ்கோடி கடல் வழியாகப் படகில் இலங்கைக்குத் தப்பிவர முயன்ற இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
இதில் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இருவரும் அவர்களது இரு குழந்தைகளுடன் மண்டபம் அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குத் தினசரி வழங்கப்படும் உணவு தொகையான 175 ரூபாய் மண்டபம் அகதிகள் முகாம் நிறுத்தப்பட்டதால் இன்று காலை முதல் இவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



