ஹர்ஷவின் கருத்தை மறுத்த மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி
#SriLanka
#Lanka4
Shana
2 years ago

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நேற்று (13) தெரிவித்த கருத்தை மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் மறுத்துள்ளார்.
பல நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும், அதற்கான உதவிகள் கிடைக்கும் என்று தான் நம்புவதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தானும் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியும் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாகவும், இலங்கைக்கு உரிய திட்டங்கள் இல்லாததால் உலக நாடுகள் உதவிக்கு வர தயங்குவதாக மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி தெரிவித்ததாக தெரிவித்திருந்தார்.



