இன்று விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள்
Prabha Praneetha
2 years ago

இலங்கை போக்குவரத்துச் சபையால் இன்று விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றதாக சபையின் பிரதான நடவடிக்கைப் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு இந்த விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை, பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன கூறியுள்ளார்.



