2023ம் ஆண்டு முதலாம் தரத்துக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான புதிய சுற்றறிக்கை!
Nila
2 years ago

2023 ஆம் ஆண்டு முதல் முதலாம் தரத்துக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான திருத்தப்பட்ட புதிய சுற்றறிக்கையை கல்வி அமைச்சு தயாரித்துள்ளதுடன், அதில் திருத்தப்பட்ட விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதுடன், இது தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைத்த சமர்ப்பணங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளை கருத்திற் கொண்டு கல்வி அமைச்சு திருத்தியமைக்கப்பட்ட புதிய சுற்றறிக்கையை தயாரித்துள்ளது.
இது தொடர்பான பிரேரணை கல்வி அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.



