அங்கப்போர் தற்காப்புக் கலைகளுக்கு ஆங்கிலேயர் விதித்த தடை நீக்கப்பட்டது
Mayoorikka
2 years ago

அங்கப்போர் தற்காப்புக் கலைகளைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் நோக்கில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் விதித்திருந்த தடையை நீக்கி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான யோசனை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாரம்பரிய விளையாட்டு, தற்காப்புக் கலை மற்றும் கலாசார பாரம்பரியமான அங்கம் தற்காப்புக் கலையை மேம்படுத்துவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
2019 ஆம் ஆண்டு அங்கம்பொர தற்காப்புக் கலை மீதான தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய போதிலும், வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை.



