கிளிநொச்சியில் மீட்கப்பட்ட அரியவகை ஆமை
Prabha Praneetha
2 years ago

கிளிநொச்சியில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, தரம்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்வாகனபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த ஆமை அடையாளம் காணப்பட்டுள்ளது,
இந்த ஆமை இனமானது அருகிவரும் நட்சத்திர ஆமை வகையை சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆமை இனமானது இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாட்டிற்கு உருத்துடையவைகள் எனவும், கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் அரிய வகையான ஆமை இனம் எனவும் தெரியவருகின்றது.



