டீசல் ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டினை வந்தடையும்
Prabha Praneetha
2 years ago

எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் டீசல் ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டினை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒருதொகை பெற்றோலினை நாட்டிற்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டில் தற்போது தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இன்றைய தினமும் எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருந்தமையினை அவதானிக்க முடிந்தது.



