இரசாயன உரங்களை மட்டும் நம்பி இருக்காதீர்கள் - முன்னாள் விவசாய அமைச்சர்
Prathees
3 years ago

தற்போதைய உலகப் பொருளாதார சூழ்நிலையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய இயற்கை உரங்களை பயன்படுத்துவதற்கு உள்ளூர் விவசாய சமூகம் பழக வேண்டும் என எதிர்பார்ப்பதாக முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் பணம் கிடைத்தாலும் யூரியாவை இறக்குமதி செய்வது கடினம்.
இரசாயன உரங்களை மட்டும் நம்பியிருந்தால் நாட்டில் விவசாயத்தை அபிவிருத்தி செய்ய முடியாது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



