அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு 5 இலட்சம் ரூபா அபராதம்
Mayoorikka
2 years ago

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக ஒரு இலட்சம் ரூபா முதல் 05 இலட்சம் ரூபா வரை அபராதம் விதிப்பதற்கான இயலுமை உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதேபோன்று குறித்த வியாபாரிக்கு எதிராக 06 மாத சிறைத்தண்டனையை விதிப்பதற்கான இயலுமையும் உள்ளதென நுகர்வோர் விவகார மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாத வர்த்தகர்களுக்கு எதிரான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



