அரிசியை அதிக விலைக்கு விற்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில், அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் மற்றும் பதுக்கி வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் இதுதொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நாவிதன்வெளி, மத்திய முகாம் போன்ற பிரதேசங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், நிந்தவூர் போன்ற பிரதேசங்களில் நேற்று கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது கட்டுப்பாட்டு விலையை மீறி விலைக்கு அரிசியை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



