அமைச்சரவைக் கூட்டம் இன்று: முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது
Mayoorikka
2 years ago

அமைச்சரவைக் கூட்டம் இன்று (12) நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
21வது திருத்தம் தொடர்பில் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
21வது திருத்தச் சட்டம் கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் விவாதம் இந்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



