இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை – லிட்ரோ
Prabha Praneetha
2 years ago

நாட்டில் தொடர்ந்து 6ஆவது நாளாக இன்றும் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டை வந்தடைந்த எரிவாயுக் கப்பலை இதுவரை விடுவிக்க முடியாத காரணத்தினால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த கப்பல் கடந்த 8ஆம் திகதி நாட்டை வந்தடைந்த நிலையில் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
இதன்படி இன்றுடன் சேர்த்து குறித்த கப்பலுக்கு 06 நாட்கள் தாமத கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



