ரஷ்ய பெண்ணை துன்புறுத்திய நபர் கைது

ரஷ்ய பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரால் நேற்று முன்தினம்(11) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
Galina Casnelson என்ற 36 வயதுடைய பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ரஷ்ய பெண், கடற்கரை அருகே உடற்பயிற்சி செய்ய சென்று கொண்டிருந்தபோது சந்தேக நபu; பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் பானாபிட்டிய வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய திருமணமானவர் எனவும் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை வடக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி சிசிர பொன்சேகாவின் பணிப்புரைக்கமைய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ராஜித குருசிங்க தலைமையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.



