ரூ.38,600 கோடி மதிப்பிலான தரமற்ற கொரோனா கவசப் பொருட்களை எரித்து மின்சாரம் வழங்க பிரிட்டன் திட்டம்

#Covid 19
Prasu
3 years ago
ரூ.38,600 கோடி மதிப்பிலான தரமற்ற கொரோனா கவசப் பொருட்களை எரித்து மின்சாரம் வழங்க பிரிட்டன் திட்டம்

உலகம் முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து, அந்த வைரஸில் இருந்து பாதுகாக்க கொரோனா முகக்கவசங்கள், கொரோனா தடுப்பு அங்கிக்கள் உள்ளிட்டவை வாங்கப்பட்டன. 

இந்நிலையில் பிரிட்டன் அரசு கொள்முதல் செய்துள்ள ரூ.38,600 கோடி மதிப்பிலான கொரோனா கவசப் பொருட்கள் தரமற்றவை என தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்த பொருட்களை எரித்து, அதன்மூலம் மின்சாரம் தயாரிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. 

அவசரத்தில் வாங்கப்பட்ட முகக்கவசம், கொரோனா தடுப்பு அங்கி உள்ளிட்ட 15,000 தொகுதிகள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் செலவீனங்களை கண்காணிக்கும் நாடாளுமன்றக் குழு, பிரிட்டன் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

ரூ.38,600 கோடி தொகையை செலவிட்டு பொருட்களை வாங்கி, அவற்றை வீணாக்குவது குறித்த விசாரணையை நாடாளுமன்ற குழு தொடங்கியுள்ளது. மேலும் கொரோனா கவசப் பொருள்கள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்தும் அச்சம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!