சிலர் இணைந்து புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்காக தற்போது திரைமறைவில் பேச்சு

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் சிலர் இணைந்து புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்காக தற்போது திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு அணி,ஐக்கிய மக்கள் சக்தியின் சிலர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தற்போது அரசாங்கத்தில் இருந்து விலகி இருக்கும் சிலர் இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.
சுசில் பிரேமஜயந்த, அனுரபிரியதர்ஷன யாப்பா, மகிந்த அமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரித்த ஹேரத், ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
புதிய கூட்டணியின் தலைவர் பதவிக்கு 5 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் உடனடியாக இந்த கூட்டணியை உருவாக்கப்படுவது சம்பந்தமாக சிலர் எதிர்ப்பை முன்வைத்துள்ளதாக பேசப்படுகிறது.



