அரிசி, சீனி மற்றும் பருப்பு விலை குறித்து வெளியான தகவல்

Kanimoli
2 years ago
அரிசி, சீனி மற்றும் பருப்பு விலை குறித்து வெளியான  தகவல்

பல வகையான அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்ததன் பின்னர், நெல் ஆலை உரிமையாளர்கள் அரிசி விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது வழக்கமாக கட்டுப்பாட்டு விலையை விதித்ததன் பின்னர் அரிசி உற்பத்தியாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையாகும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சீனி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயரும் பட்சத்தில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் அதிகளவு அரிசியை வாங்கி குவிக்க வேண்டாம் என அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அரிசி அதிக அளவு சேமித்து வைப்பது மற்றும் அதிக விலைக்கு அரிசியை கொள்வனவு செய்வதன் விளைவாக விலைகளை அதிகரிக்கும்.

அரிசியின் விலை உயர்வு தேவைப்பட்டாலோ அல்லது கோரிக்கை நியாயமானதாக இருந்தாலோ அனுமதிக்கப்படும் எவ்வாறாயினும், தற்சமயம் திடீரென விலை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை.

அடுத்த வாரத்துக்குள் சீனி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!