வீணாக வரிசைகளில் காத்திருக்கவேண்டாம்: லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு
Mayoorikka
2 years ago
நாட்டில் இன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது. அதன் காரணமாக மக்கள் எரிவாயு சிலிண்டர் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை லிட்ரோ நிறுவனத்திடம் போதுமன அளவு எரிவாயு சிலிண்டர்கள் காணப்படாமையே இவ்வாறு தெரிவிக்க காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட விஜித ஹேரத் நேற்று முதல் அமுலாகும் வகையில் பதவி விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.