ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் கைது!
Mayoorikka
2 years ago
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் காவல்துறை போதைப்பொருள் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையிலிருந்து வருகைதந்த நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 1.3 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.